கடந்த மாதம் 18 ஆம் தேதி சென்னை தலைமை செயலக காலனி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது,கஞ்சா மற்றும் கத்தியுடன் விக்னேஷ்,சுரேஷ் என்பவர் பிடிபட்ட நிலையில்,அதன்பின்னர்,போலீஸ் விசாரணையில் விக்னேஷ் மர்மமான முறையில் உயிரிழந்தார்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. இந்த வேளையில்,தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து […]