கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக செந்தில் குமாரிடம் 2-வது நாளாக தனிப்படை போலீசார் விசாரணை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-இல் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக,முக்கிய குற்றவாளி கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில்,கேரளாவைச் சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்து இருந்தனர்.இவர்கள் தற்போது ஜாமீனில் உள்ளனர். அதே சமயம், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு […]
2-வது நாளாக இன்றும் பூங்குன்றனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக யார், யாரிடம் விசாரிக்கப்படாமல் இருந்தார்களோ, அவர்களை தற்போது தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுவரை சசிகலா, விவேக் ஜெயராமன், மேலாளர் நடராஜன், முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, சஜீவன் உள்ளிட்ட 200 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் அதிமுக பிரமுகர் […]
தஞ்சை:பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் விசாரணை தொடங்கியது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்தார். மேலும்,விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவி,கடந்த ஜனவரி 9-ஆம் தேதி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில் 19 ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து,தஞ்சாவூரில் தங்கி படித்து வந்த அரியலூரை சார்ந்த பிளஸ் டூ மாணவி தற்கொலை […]
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட்டில் நீண்ட நாளாக மூடப்பட்டு சத்துணவு கூடத்தில் உடல் சிதைந்த நிலையில் கிடந்த குட்டியானையின் எலும்புக்கூட்டை மீட்டு வனத்துறையினர் விசாரணை. கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட்டில் உடல் சிதைந்த நிலையில் குட்டியானையின் எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது. இந்த எலும்புக்கூடானது, நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த தொடக்கப்பள்ளியின் சத்துணவு கூடத்தில் கிடந்துள்ளது. இதனையடுத்து, வனத்துறை அதிகாரிகள் எலும்புக் கூட்டை கைப்பற்றி குட்டியானை எப்படி இறந்தது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர்:விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயார் என விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் ராஜேந்திர பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக அவர் மீது கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னர்,பணமோசடி செய்த புகாரில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிசம்பர் 17-ஆம் தேதி தள்ளுபடி செய்ததால் ராஜேந்திர […]
டெல்லி:பஞ்சாப்பில் நேற்று முன்தினம் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு குறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் ரூ. 42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட இருந்தார்.இந்த நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் பஞ்சாப் வந்த பிரதமர் மோடி,விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல இருந்த நிலையில் மோசமான வானிலை கரணமாக ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு சாலை மார்க்கமாக பிரதமர் சென்றார். அப்போது,பதிண்டா […]
பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை தாக்கிய மர்ம நபர். தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் படப்பிடிப்புக்காக பெங்களூர் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது திடீரென்று மர்ம நபர் ஒருவர் விஜய் சேதுபதி மீது எட்டி உதைத்துள்ளார்.இதனால், நிலைதடுமாறிய விஜய்சேதுபதியை, பாதுகாப்புக்கு வந்தவர்கள் தாங்கிப் பிடித்தனர். இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் விஜய் சேதுபதி விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய போது வெள்ளை சட்டை மற்றும் கருப்பு […]
கோடநாடு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கலான பிறகு மீண்டும் விசாரணைக்கு தடை வித்திக்க கோரும் வழக்கில் தீர்ப்பு வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோடநாடு கொலை ,கொள்ளை தொடர்பாக காவல்துறை விசாரணையை விரிவுப்படுத்தியுள்ளது.இந்த விசாரணையில் தனக்கு சில நபர்கள் பாதிப்பு ஏற்படுத்துவதாகவும்,காவல்துறைக்கு ஏற்றவாறு சாட்சி சொல்ல தன்னை கட்டாயப்படுத்துவதாகவும்,எனவே,இந்த விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்றும்,இது தொடர்பாக நீலகிரி நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறி கோயம்புத்தூரை சேர்ந்த ரவி என்பவர் சென்னை உய்ரநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில்,இந்தவழக்கு இன்று […]