நாட்டின் பிரபல மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான TCS-ன் பங்குச்சந்தை மதிப்பு, 7 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே இத்தகைய உச்சத்தை அடைந்த முதல் நிறுவனமாகவும், TCS உருவெடுத்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில், இன்றைய வர்த்தகம் தொடங்கியதிலிருந்து டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குகளின் மதிப்பு ஏற்றத்துடன் காணப்பட்டது. வர்த்தகநேர மத்தியில், 52 வாரங்களில் இல்லாத உயர்வை கண்டு, 3 ஆயிரத்து 674 கோடி வருவாயுடன், TCS-ன் பங்குச்சந்தை மூலதன மதிப்பு, 7 லட்சத்து 3 ஆயிரத்து 309 கோடி […]
நுகர்பொருட்களுக்கு இறக்குமதி வரியை குறைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவுடன் நடைபெற்ற வர்த்தக போர் முடிவுற்றதாக கூறப்படும் நிலையில் இந்த திட்டத்துக்கு அந்நாட்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெறப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கெனவே கடந்த ஆண்டு இதேபோல் 200 பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. இந்நிலையில், உணவு முதல் அழகு சாதனப்பொருட்கள் வரையிலான பல நுகர்வுப் பொருட்களுக்கு இறக்குமதி வரியைக் குறைக்க சீனா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்