தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகிய ‘அசானி புயல்’ வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நிலையில்,இன்று இரவு ஆந்திர கடற்கரைக்கு மிக அருகில் வந்து பின்னர் வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லும் எனவும்,இதனால் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,திருவள்ளூர்,திருவண்ணாமலை,விழுப்புரம்,திருவாரூர்,வேலூர்,ராணிப்பேட்டை,திருப்பத்தூர்,கிருஷ்ணகிரி,தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும்,சென்னையைப் பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு விட்டுவிட்டு மழை பெய்யும் என்றும் வானிலை […]