மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வசீம் அக்ரம் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். வாணியம்பாடி அருகே முன்விரோதத்தால் மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் வசீம் அக்ரம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில்,சட்டம்-ஒழுங்கை பராமரிக்க இயலாத திமுக அரசின் மெத்தனப் போக்கால் படுகொலை செய்யப்பட்ட வாணியம்பாடியைச் சேர்ந்த வசீம் அக்ரம் அவர்களின் […]