தமிழகத்தில் இதுவரை 3.62 கோடி பேரின் வாக்காளர் அடையாள எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. – தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதாப் சாகு. இந்தியா முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணிகள் கடந்த 4 மாதங்களுக்கு முன்னரே தொடங்கிவிட்டது. இரட்டை வாக்குரிமை, இறந்துபோனவர்களுக்கு வாக்குரிமை என பல்வேறு குளறுபடிகளை தீர்க்க இந்த இணைப்பு உபயோகமாக இருக்கும் என கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆதார் – வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு விவரம் குறித்து […]
புனே மாவட்டத்தில் சுமார் 3,82,351 பேர் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைத்துள்ளனர். புனே மாவட்டத்தில் 78,69,276 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் செயல்முறை 21 தொகுதிகளில் ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நகர்ப்புற வாக்காளர்களை விட அம்பேகான், இந்தாபூர், போர், கெத் மற்றும் மாவல் போன்ற கிராமப்புற சட்டமன்ற வாக்காளர்கள் தான் அதிகளவு இணைத்துள்ளனர் என்று கலெக்டரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான […]
மகாராஷ்டிராவின் தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீகாந்த் தேஷ்பாண்டே கூறுகையில், ‘இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்கும் திட்டத்தை ஆகஸ்ட் 1 முதல் மாநிலம் முழுவதும் தொடங்கும்’ என்றார். “வாக்காளர் அடையாள அட்டைகள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட வேண்டும். வாக்காளர்களின் அடையாளத்தை சரிபார்த்தல் மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை அங்கீகரித்தல் மற்றும் ஒரே நபரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவு செய்ததை […]
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்புக்கு வரவேற்பு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ள நிலையில், தமிழகத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளைத் தொடங்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதை மநீம வரவேற்கிறது. இந்நடவடிக்கையானது போலி வாக்காளர்களை நீக்குவதற்கு உதவும். கள்ள ஒட்டுகளைத் தடுக்கும். அதேசமயத்தில் […]
இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும்,தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில்,வாக்காளர் அடையாள அட்டையுடன்,ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு கடந்த ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. மத்திய அமைச்சரவை கருத்துப்படி,இந்த மசோதா மூலம் ஒருவர் பல வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்துவதை தடுக்க முடியும் என்பதாகும்.ஆனால்,ஆதார் எண் இல்லாதவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படலாம் என்று கூறி ஆபத்தான இந்த தேர்தல் […]
இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும், தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில்,வாக்காளர் அடையாள அட்டையுடன்,ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு கடந்த ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. மத்திய அமைச்சரவை கருத்துப்படி,இந்த மசோதா மூலம் ஒருவர் பல வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்துவதை தடுக்க முடியும் என்பதாகும். மேலும்,பெண் ராணுவ அலுவலர் வெளியூர் சென்றால் அவருக்கு பதில் கணவர் […]
உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும் வாக்களிக்கலாம். தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும் வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி கீழே கொடுக்கப்பட்டுள்ள […]