மதுரையில் போக்குவரத்து விதிகளை மீறி, வாகன எண் பலகை பொருத்திய 1,050 வாகனங்களுக்கு அபராதம். போக்குவரத்து விதிகளை மீறி, வாகன எண் பலகை பொருத்திய 1,050 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதில், மொத்தம் ₹7 லட்சம் அபராதம் வசூலாகியுள்ளதாக மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை தகவல் அளித்துள்ளது. மேலும், உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவின் படி, மதுரை மாநகரில் விதிமுறை மீறி பொருத்திய வாகன எண் பலகையை முறைப்படி மாற்றம் செய்து வாகனங்கள் விடுவிக்கப்பட்டது.