Tag: வழக்குப்பதிவு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

Annamalai: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய புகாரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு. மக்களவை தேர்தலை முன்னிட்டு நேற்றிரவு கோவை ஆவாரம்பாளையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால், திமுகவினர் காவல்துறையிடம் சென்று முறையிட்டனர். அதாவது நேரம் கடந்து அண்ணாமலை பிரச்சாரம் செய்வதாக குற்றசாட்டியுள்ளனர். இதன்பின், பாஜக – திமுகவினர் இடையே மோதல் […]

#Annamalai 5 Min Read
annamalai

அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.! நடந்தது என்ன.? 

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி காவல்நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதியை சீர்குலைக்கும் வண்ணம் நடந்துகொண்டதாக இளைஞர் ஒருவர் புகார் அளித்து உள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் “என் மண் என் மக்கள்” எனும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தர்மபுரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அண்ணாமலை, கடந்த 8ஆம் தேதி பொம்மிடி அருகே பள்ளிப்படி எனும் ஊரில் உள்ள லூர்து அன்னை தேவாலயத்தின் உள்ளே […]

#Annamalai 4 Min Read
BJP State President Annamalai

15 கோடி மோசடி… 2 பேர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்த எம்எஸ் தோனி!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, 15 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து, 2 பேர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்துள்ளார். 2017ம் ஆண்டு கிரிக்கெட் அகாடமி அமைப்பது குறித்து தோனியுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறியதற்காக ஆர்கா ஸ்போர்ட்ஸ் மற்றும் மேனேஜ்மெண்ட் லிமிட்டெடை சேர்ந்த திவாஹர் மற்றும் விஷ்வாஷ் இருவர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்துள்ளார். ஆர்கா ஸ்போர்ட்ஸ் மற்றும் மேனேஜ்மென்ட்டை சேர்ந்த மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா விஷ்வாஷ் என்ற அதிகாரிகள் […]

#Ranchi 5 Min Read
ms dhoni

தன்னைத்தானே சுட்டுக் கொண்ட 4 வயது சிறுவன்..! பெற்றோர் மீது வழக்குப்பதிவு..!

அமெரிக்காவில் 4 வயதான ரோனி லின், ஜூலை 6 ஆம் தேதி ரோஸ்ட்ராவர் டவுன்ஷிப்பில் உள்ள காடியோ டிரைவில் உள்ள தனது வீட்டில் தற்செயலாக கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். இதனையடுத்து அவர், மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில், சிறுவன் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக வெஸ்ட்மோர்லேண்ட் கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உதவியுடன் ரோஸ்ட்ராவர் போலீஸார் கடந்த பல மாதங்களாக தீவிர விசாரணை […]

#Shooting 4 Min Read
Baby

போதைப்பொருள் வாங்குவதற்காக பெற்ற பிள்ளைகளை விற்ற கொடூர பெற்றோர்..!

மும்பையில், போதைப்பழக்கத்திற்கு அடிமையான தம்பதி தங்களது குழந்தைங்களை விற்று போதைப்பொருள் வாங்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஷபீர் மற்றும் சானியா கான் இருவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளனர். போதைக்கு அடிமையான தம்பதியினர் தங்கள் இரண்டு குழந்தைகளை விற்று பணம் பெற்றுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினர். தங்களது ஆண் குழந்தையை அறுபதாயிரம் ரூபாய்க்கும், ஒரு மாத பெண் குழந்தையை பதினான்காயிரம் ரூபாய்க்கும் விற்றுள்ளனர். தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த பிரதமர் மோடி..! சம்பவம் குறித்து தம்பதியின் […]

#Arrest 4 Min Read
arrested

பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீட்டில் தாக்குதல் – 13 பேர் மீது வழக்குப்பதிவு

சசிகலா புஷ்பா வீட்டின் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில், 13 பேர் மீது வழக்குப்பதிவு  தமிழக பாஜக மாநில துணைத்தலைவராக இருப்பவர் சசிகலா புஷ்பா. இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் தபால் தந்தி காலனியில் வசித்து வருகிறார்.  நேற்று முன்தினம் அவர் நாகர்கோவிலுக்கு சென்ற பின், அவரது வீட்டிற்கு 15 பேர் கொண்ட மர்ம கும்பல்  வந்துள்ளனர். இந்த கும்பல் வீட்டின் மீது சராசரியாக கற்களை வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் வீட்டின் முன் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் […]

சசிகலா புஷ்பா 3 Min Read
Default Image

4-ஆம் வகுப்பு மாணவனை கொடூரமாக அடித்த ஆசிரியர்..! சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழப்பு..!

கர்நாடகாவில் மாணவன் சேட்டை செய்ததால்,  ஆசிரியர் இரும்பு கம்பியால் தாக்கிய நிலையில், மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.  கர்நாடகா, கதக் மாவட்டத்தில் 4ம் வகுப்பு மாணவன் சேட்டை செய்ததால்,  ஆசிரியர் இரும்பு கம்பியால் தாக்கி, சிறுவனை முதல் தளத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். தடுக்க வந்த சிறுவனின் தாயும், ஆசிரியருமான கீதா மீதும் ஆசிரியர் தாக்குதல் நடத்தியுள்ளார். மாணவன் பலத்த காயத்துடன் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். மாணவனை தாக்கிய ஒப்பந்த ஆசிரியர் […]

- 2 Min Read
Default Image

முடி மாற்று அறுவை சிகிச்சை..! பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்..! 4 பேர் கைது..!

டெல்லியில் முடிமாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட இளைஞர் உயிரிழப்பு.  டெல்லியை சேர்ந்த ஆதர் ரஷித் என்ற 30வயது இளைஞர் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் தனது தலையில் உள்ள முடிகள் கொட்டுவதால் வழுக்கை தலை தனது அழகை குறைப்பதாக எண்ணி கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள ஒரு கிளினிக்கின் விளம்பரத்தை பார்த்து அங்கு சென்று முடிமாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். இந்த நிலையில், ரஷீத் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்து சில நாட்களிலேயே […]

#Death 4 Min Read
Default Image

5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – 5 தோப்புக்கரணம் மட்டுமே தண்டனை..!

பீகாரில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 5 தோப்புக்கரணம் போட சொல்லி தண்டனை கொடுத்த கிராம் பஞ்சாயத்து.   பீகார் மாநிலம், நவாடா மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தை ஒரு ஆண், அந்த பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை சாக்லேட் வாங்கி தருவதாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையை ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் கிராம மக்களுக்கு தெரியவந்தத்த்து. இதனையடுத்து அவரை கிராம பஞ்சாயத்தில் நிறுத்தினார். அந்த பஞ்சாயத்தில் சிலர் அவர் செய்தது தவறு எனக் கூறி […]

- 2 Min Read
Default Image

#JustNow : விதிமீறிய நடிகர் விஜய்.? போக்குவரத்து துறை அபராதம்…!

விஜய் தனது காரின் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி இருந்ததாக கூறி போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு. நடிகர் விஜய் கடந்த 20-ஆம் தேதி பனையூரில் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க காரில் சென்றிருந்தார். அப்போது விஜய் தனது காரின் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி இருந்ததாக கூறி போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். மேலும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடிகர் விஜய்க்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

FINE 2 Min Read
Default Image

காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு…!

மத்தியப் பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு.  மத்தியப் பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான உமாங் சிங்கார் மீது 38 வயது பெண் ஒருவர் காவல்நிலையத்தில், பாலியல் பலாத்கார புகார் அளித்தார்.  இதனையடுத்து, தார் நகரில் உள்ள நவ்கான் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து தார் போலீஸ் எஸ்பி ஆதித்யா பிரதாப் சிங் கூறுகையில், ‘காந்த்வானி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ உமாங் சிங்கார், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் குடும்பம் […]

#Congress 3 Min Read
Default Image

தேவைக்கு அதிகமாக மருந்துகளை வாங்கி அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய 4 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு…!

மதுரை மண்டலத்தில் தேவைக்கு அதிகமாக மருந்துகளை வாங்கி, காலாவதியாக்கி, அரசுக்கு ₹27.16 கோடி இழப்பு ஏற்படுத்திய 4 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு கடந்த 2017-ஆம் ஆண்டு மதுரை மண்டலத்தில் தேவைக்கு அதிகமாக மருந்துகளை வாங்கி, காலாவதியாக்கி, அரசுக்கு ₹27.16 கோடி இழப்பு ஏற்படுத்திய 4 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முன்னாள் கிராம சுகாதார சேவை இயக்குநர் இன்பசேகரன், மதுரை மண்டல மருத்துவ அதிகாரி ஜான் ஆண்ட்ரூ, கண்காணிப்பாளர்கள் அசோக் […]

Casefill 2 Min Read
Default Image

#BREAKING : வீராங்கனை பிரியா மரணம் – முன்ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் 2 மருத்துவர்கள் மனு..!

மருத்துவர்கள் பால் ராம்சங்கர், சோமசுந்தர் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த நிலையில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில்,  பால்ராம் சங்கர், சோமசுந்தரம் ஆகிய 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இவர்கள் இருவர் மீதும், கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என்ற பிரிவில் […]

- 3 Min Read
Default Image

வீராங்கனை பிரியா மரணம் – மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு..!

வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு. கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வீராங்கனை பிரியாவின் இல்லத்திற்கு சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிவாரண நிதி, அரசு வேலை ஆகியவற்றிற்கான ஆணையை வழங்கினார். மேலும், தவறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை  […]

- 2 Min Read
Default Image

காதலியை 35 துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்த காதலன்..! நடந்தது என்ன..?

திருமணம் செய்ய மறுத்ததால் காதலியை 35 துண்டுகளாக வெட்டிய காதலன்.  மும்பையைச் சேர்ந்தவர் அஃப்தப் அமீன் பூனாவாலா. இவர் பிரபல கால் சென்டர் ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவருடன் பணியாற்றி வந்த ஷ்ரத்தா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனை எடுத்து இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில், பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். பெண் வீட்டாரின் எதிர்ப்பை தொடர்ந்து,  இருவரும் திருமணம் […]

#Murder 5 Min Read
Default Image

அண்ணாமலை மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை மீது 6 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில், ஆளும் திமுகவினர் தொடர்ந்து பெண்களை இழிவாக பேசுவதை கண்டித்து, பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களும் கலந்து கொண்டார். இந்த நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மகளிர் அணி உறுப்பினர்களை காவல்துறையினர் கைது  செய்தனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட அண்ணாமலை மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு […]

#Annamalai 2 Min Read
Default Image

போக்குவரத்து வீதிமீறல் – கடந்த 3 நாட்களில் மட்டும் 6,187 வழக்குகள் பதிவு

சென்னையில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.42 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  சாலை விபத்துக்களை தடுக்க அதிகாரிகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு பல மடங்கு அபராதத்தை அதிகரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவு கடந்த 26-ஆம் தேதி நடைமுறைக்கு வந்த நிலையில், சென்னையில் மட்டும் கடந்த 3 நாட்களில் மட்டும் 6,187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து விதிகளை மீறியதாக […]

FINE 2 Min Read
Default Image

சென்னையில் ஒரே நாளில் ₹15.5 லட்சம் அபராதம் வசூல் – போக்குவரத்து காவல்துறை

சென்னையில், நேற்று மட்டும் 2500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.15.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்.  சாலை விபத்துக்களை தடுக்க அதிகாரிகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு பல மடங்கு அபராதத்தை அதிகரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. புதிய அபராத தொகை வசூலிக்கும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், சென்னையில், நேற்று மட்டும் 2500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.15.5 […]

FINE 2 Min Read
Default Image

சென்னையில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 163 வழக்குகள் பதிவு – காவல்துறை

சென்னையில் நேற்று, நேரக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 163 வழக்குகள் பதிவு. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக மக்கள் உற்சாகமாக பட்டாசு வெடித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக தீபாவளி கொண்டாடப்பட்டது. ஆனால், தீபாவளியன்று, காலை மற்றும் மாலை 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் நேற்று, நேரக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 163 வழக்குகள் பதிவு […]

#Crackers 2 Min Read
Default Image

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு – இந்திய கடற்படையினர் மீது வழக்குப்பதிவு…!

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடற்படையினர் மீது வழக்குப்பதிவு.  நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்திய எல்லையில் மீன் பிடித்து வந்த தமிழக மீனவர்களை இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ரோந்து பணியில் இருந்த இந்திய கடலோர காவல்படையினர், குறிப்பிட்ட அந்த படகு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அந்த படகை எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. எச்சரிப்பையும் மீறி, அந்த படகு மீன்பிடித்த காரணத்தால் படகை நோக்கி காவல்படையினர் சுட்டதாகவும், அது தவறுதலாக மீனவர் வீரவேல் மீது […]

- 3 Min Read
Default Image