96 திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை வர்ஷா பொல்லம்மா. இவர் இந்த திரைப்படத்தினை தொடர்ந்து பிகில் திரைப்படத்திலும் நடித்திருந்தார். தமிழில் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு மொழிகளிலும் சில படங்களில் வர்ஷா பொல்லம்மா நடித்து இருக்கிறார். சமீபகாலமாக பெரிதாக தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் வேறு மொழிகளில் நடிக்க சென்று இருக்கிறார். அந்த வகையில், இவர் தற்போது சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக ‘உரு பரம பைரவகோனா’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். […]