முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை வருவாய்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தேவர் ஜெயந்தியின் போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்க, அதிமுக சார்பில் கடந்த 2014-ம் ஆண்டில் 13 கிலோ தங்க கவசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் வரும் 28 முதல் 30ஆம் தேதி வரை தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது.அப்பொழுது தங்க கவசமானது தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும்.அதன் பின்னர் மதுரை அண்ணாநகரில் உள்ள ‘பேங்க் ஆஃப் இந்தியா’ வங்கியின் […]
சென்னை:விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்கு நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக வருவாய்துறையினருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் உள்ள சென்னை,கோவை,திருச்சி,மதுரை,சேலம்,தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்கு நிலங்களை கையகப்படுத்துவது மற்றும் அதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,தலைமைச்செயலகத்தில் தற்போது வருவாய்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய்துறை அமைச்சர் ராமச்சந்திரன், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.