உயர் சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு வருமான வரம்பை எப்படி நிர்ணயித்தீர்கள்? என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான வருமான வரம்பை எப்படி நிர்ணயித்தீர்கள் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. நகரம், கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு எப்படி ஒரே மாதிரியான வருமான வரம்பை நிர்ணயிக்க முடியும்? என்றும் வருமான வரம்பை நிர்ணயிக்க அறிவியல் பூர்வமான ஆய்வு ஏதாவது செய்யப்பட்டதா? எனவும் கேள்வி எழுப்பியது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான சான்றிதழை வட்டாட்சியரிடம் பெற வேண்டும் என்கீறீர்கள். […]