வெளிநாட்டு பாமாயில் எண்ணெய் இறக்குமதி வரிசலுகை காலவறையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது சமையல் எண்ணெய் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ள காரணத்தால், அதன் தட்டுப்பாடை குறைக்க, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கபட்ட பாமாயில் எண்ணெய்க்கு வரிச்சலுகை இன்னும் நீட்டிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும் பாமாயில் எண்ணெய்க்கு இறக்குமதி வரி சலுகையானது இந்தாண்டு டிசம்பர் 31 வரை ஏற்கனவே நீட்டிக்கப்பட்டு இருந்தது. அது தற்போது காலவரையின்றி நீட்டிக்கப்படுவதாக வெளிநாட்டு வர்த்தக மையம் நிர்ணயம் செய்துள்ளது. இந்தியாவில் பயன்படுத்தபடும் […]
மத்திய பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி சலுகை குறித்த அறிவிப்பு வெளியாகாததால் ஏமாற்றமடைந்த பலர் ட்விட்டரில் மீம்ஸ் மூலம் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கொரோனாவின் மூன்றாவது அலைக்கு மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட் தாக்கலை இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இன்று பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் 92 நிமிடங்கள் (1 மணி நேரம் 32 நிமிடம் ) உரையாற்றினார். பொதுமக்கள் கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு முறையும் பட்ஜெட் […]