இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே 10.5% இடஒதுக்கீட்டை கொண்டு வரலாம் என அன்புமணி ராமதாஸ் பேட்டி. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.இச்சந்திப்பில் பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர். அப்போது, வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு குறித்து புள்ளிவிவரங்கள் கொண்ட அறிக்கையை தயார் செய்து, நடப்பு கூட்டத்தொடரிலேயே புதிய சட்டம் இயற்ற வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாக கூறப்பட்டது. வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்து […]
வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி. முன்னதாக,வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாமக, தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பிஆர் கவாய் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், சாதியை மட்டுமே அடிப்படையாக கொண்டு இடஒதுக்கீடு வழங்க […]