வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது.இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன.அதனை விசாரித்த நீதிபதிகள் 10.5% உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பளித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் 10.5% உள் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் […]
வன்னியர் இட ஒதுக்கீட்டில் செய்யப்பட்ட மாணவர் சேர்க்கை, நியமனங்களுக்கு தடை இல்லை, விரைவில் முழு வெற்றி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தின்படி இதுவரை மேற்கொள்ளப்பட்ட மாணவர் சேர்க்கை மற்றும் அரசு பணி நியமனங்களை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் நேற்று தெரிவித்தது.அதேநேரத்தில்,இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் நடத்தி முடிக்கப்படும் என்றும் கூறி உச்சநீதிமன்ற நீதிபதிகள் […]
வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீடு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி முந்தைய அரசு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து 25-க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். சட்டமன்ற தேர்தல் அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாக அரசியல் லாபத்திற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டதாக மனுவில் புகார் […]
மாணவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டை மீண்டும் நிறைவேற்றாமல் ஓய மாட்டேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மாணவர்களே கவலை வேண்டாம், பறிக்கப்பட்ட உள் இட ஒதுக்கீட்டை மீட்டெடுக்காமல் பாமக ஓயாது என்று அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் கூறியதாவது: காத்திருப்பு: “என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே, தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 10.50% உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை […]