நெகிழி பொருள்களை வைத்துள்ள வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீலகிரி, கொடைகானலில் நெகிழி பயன்பாட்டுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீலகிரி, கொடைகானலில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்களை வைத்துள்ள வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அபராதம் விதிப்பது மட்டும் தீர்வாகாது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.