வட கொரியா புதிய போர்க்கப்பல்கள் மற்றும் புதிய வகை விமான எதிர்ப்பு ஏவுகணைகளுடன் கூடிய க்ரூஸ் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது. சர்வதேச அளவில் தங்களை சக்தி வாய்ந்த நாடாக கருத வட கொரியா பல்வேறு ஏவுகணை சோதனைகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. இந்த அடிக்கடி ஏவுகணை சோதனைகளை அண்டை நாடான தென்கொரிய கடுமையாக எதிர்த்து வருகிறது. அந்த வகையில், நேற்று (பிப்ரவரி 2) வட கொரியா மேற்கு கடற்கரையில் இருந்து கப்பல் ஏவுகணைகள் மற்றும் நிலத்திலிருந்து வான் […]
வடகொரியா பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது, இதில் ஒன்று மத்திய மற்றும் வடக்கு ஜப்பானின் சில பகுதிகளில் விழுந்தது. வட கொரியா குறைந்தபட்சம் ஒரேநாளில் 23 ஏவுகணைகளை ஏவிஇருக்கிறது. இதனால் மத்திய ஜப்பானில் உள்ள மியாகி, யமகட்டா மற்றும் நிகாட்டா மாகாணங்களில் வசிப்பவர்கள் வீட்டுக்குள்ளேயே தஞ்சம் அடையும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஏவுகணை முதன்முதலில் ஏவப்பட்ட சுமார் 25 நிமிடங்களுக்குப் பிறகு, அது விழுந்துவிட்டதாக ஜப்பானின் கடலோர காவல்படை கூறியது. மேலும் இது பசிபிக் பெருங்கடலில் ஜப்பானுக்கு கிழக்கே 1,100 […]
கடந்த 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவிய நிலையில்,வடகொரியாவில் யாருக்கும் கொரோனா இல்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.குறிப்பாக,வட கொரியாவில் உள்ள 25 மில்லியன் மக்களில் யாருக்கும் தடுப்பூசி போடவில்லை என்று கூறப்படுகிறது.உண்மையில்,வடகொரியா அரசு சீனா, ரஷ்யா மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றின் தடுப்பூசி சலுகைகளை நிராகரித்துள்ளது. இந்நிலையில்,இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு,வட கொரியாவில் முதல் கொரோனா வழக்கு பதிவாகியுள்ளது.இதனால்,வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்,கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக நாட்டின் […]
வடகொரியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணை சோதனை அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. வடகொரியா நீண்ட தூரம் பயணம் செய்யும் ஏவுகணையை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெற்றிகரமாக ஏவி பரிசோதனை செய்துள்ளது. இந்த பரிசோதனை வார இறுதியில் மேற்கொள்ளப்பட்டதாக வட கொரிய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த சோதனை ஏவுகணை தண்ணீருக்கு மேல் 1500 கிலோமீட்டர் பயணம் செய்ததாகவும், இந்த ஏவுகணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மூல ஆயுதம் எனவும், இது […]
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் உலகம் முழுதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி பல உயிர்களை காவு வாங்கி வருகிறது. அதில், சீனா, இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில்,தற்போது, கிழக்காசிய நாடான தென் கொரியாவிலும் பலர் உயிரிழந்து உள்ளனர். ஆனால், அதன் அண்டை நாடான வட கொரியாவில், கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை என, அந்த நாட்டு அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இந்நிலையில், வட கொரியா நாட்டின் பேரிடர் தடுப்பு துறைக்கான இயக்குனர், […]
தனது 70 தாவது ஆண்டு விழாவை கொண்டடும் விதமாக மிக பிரம்மண்டமான அணிவகுப்பும்,விளையாட்டு போட்டிகளும் நடத்த திட்டமிட்டுள்ளது.வட கொரியாவின் ஆயுத கிடங்குகள் குறித்தும், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களற்ற நிலையை உருவாக்குவதாக வட கொரியா கொடுத்த உறுதிமொழியின் நிலை குறித்தும் தெரிந்து கொள்ள இந்த அணிவகுப்பு நெருக்கமாக கண்காணிக்கப்படும். அதிக அளவிலான பாலிஸ்டிக் ஏவுகணைகள் அணிவகுப்பில் கொண்டுவரப்பட்டால், பிற நாடுகளிடையே அது கோபத்தை ஏற்படுத்தலாம்.அதிக எண்ணிக்கையிலான ஜிம்னாஸ்டிக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் செய்யும் நடன அசைவுகள் கொண்டு […]
உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா சமீப காலமாக பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்தது. மேலும், ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையிலும் முழுமையான வெற்றி பெற்றதாகவும் அந்நாடு தெரிவித்திருந்தது. இதனால், ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியாவுக்கு எதிராக கடும் பொருளாதார தடைகள் அடங்கிய தீர்மானத்தை கொண்டுவந்து நிறைவேற்றியது. வடகொரியாவின் நிலக்கரி, லெட் (கனிமப்பொருள்) மற்றும் கடல் உணவுகள் ஏற்றுமதி என வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகளை உள்ளடக்கிய […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் – வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் வரும் 12-ம் தேதி காலை 9 மணியளவில் சிங்கப்பூரின் பிரபலமான சுற்றுலாத்தலமான சென்ட்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். உலக நாடுகள் அனைத்தும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தையை செய்தியாக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுமார் 2500 ஊடகவியலாளர்கள் சிங்கப்பூரில் திரண்டுள்ளனர். இவர்கள் செய்திகளை சேகரிக்க தனியாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், […]