மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கினார். மேலும், அனைத்து சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில், ‘மிக்ஜாம்’ புயலினால் ஏற்பட்ட பாதிப்பினை சீர்செய்திடவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கிட வங்கி விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. புயல் நிவாரண நிதி – […]