பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் ஏய்ப்பு செய்த தொழிலதிபர் நீரவ் மோடியை தப்பி ஓடியவராக அறிவித்து, அவரது 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை உடனடியாக பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. பொருளாதார குற்றவியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில், கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நபர் நடவடிக்கைகளிலிருந்து தப்புவதற்காக வெளிநாட்டுக்குச் சென்றால் தப்பி ஓடியவராக கருதப்படுவார். கடந்த 24ம் தேதி அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் ஏய்ப்பு […]
நீரவ் மோடியின் வங்கி மோசடி போல சென்னையைச் சேர்ந்த கனிஷ்க் கோல்டு நிறுவனம் ரூ.824.15 கோடி மோசடி செய்துவிட்டதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சிபிஐயிடம் புகார் அளித்தது. சென்னை தியாகராய நகரில் ‘கனிஷ்க் கோல்டு’ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக பூபேஷ் குமார் ஜெயின், நீதா ஜெயின் ஆகியோர் இருந்து வருகின்றனர். இந்த நிறுவனம் கிரிஸ் என்ற பெயரில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தங்க நகை தயாரிக்கும் உற்பத்திக் கூடங்கள் அமைத்து செயல்பட்டு வருகிறது. […]