லஞ்சம் வாங்கும் போலீசுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. கையூட்டு (லஞ்சம்) பெறும் காவல்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டுமல்லாது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் குமாரதாஸின் ஓதிய உயர்வு பலன்களை நிறுத்தி வைத்தது எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில், சமுதாயத்தையும், அரசின் நலத்திட்டங்கள் அமல்படுத்தப்படுவதையும் ஊழல் […]
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை அமைச்சக அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கூறி சந்தோஷ் பாட்டீல் எனும் ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு காரணமான கர்நாடக பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி ராஜினாமா செய்து கொண்டார். இந்நிலையில், தற்போது மீண்டும் கர்நாடக மாநிலத்தில் இதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்து வருகிறது. […]
மதுரை மாவட்டம் யா.ஒத்தக்கடை காவல் நிலைய ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ள சரவணன் அவர்கள் விளம்பர பலகை ஒன்றை வைத்துள்ளார். இன்று அனைத்து துறைகளிலும் லஞ்சம் என்பது தலைதூக்கியுள்ளது. இதற்கு மத்தியில் சில நேர்மையான அதிகாரிகளும் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் மதுரை மாவட்டம் யா.ஒத்தக்கடை காவல் நிலைய ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ள சரவணன் அவர்கள் விளம்பர பலகை ஒன்றை வைத்துள்ளார். அதில் ‘லஞ்சம் பெறுவதில்லை’ – என் பெயரை சொல்லிக்கொண்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை சுமுகமாக முடித்து தருவதாக […]
திருமங்கலத்தில் மின்வாரிய உதவி பொறியாளர் முகமது உபாஷ் கைது செய்யப்பட்டார். மதுரை திருமங்கலத்தில் 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் முகமது உபாஷ் கைது செய்யப்பட்டார். புதிய மின் இணைப்பு தர விவசாயிகளிடம் லஞ்சம் பெற்ற போது முகமது உபாஷை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
நெல்லை, கொண்டசமுத்திரம் ஊராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள், மக்களிடம் லஞ்சம் வாங்க மாட்டோம் என்று கருணாநிதி மற்றும் கடவுளின் பெயரால் உறுதிமொழி ஏற்றனர். தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக […]
சமுதாயத்தை கரையான் போல் ஊழல் செல்லரிக்க செய்துவிட்டது என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. ஊழல் வேர் பரவி கரையான் போல் சமுதாயத்தை செல்லரித்துள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. லஞ்சம் பெறுவது என்பது தற்போது வாடிக்கையாகிவிட்டது என்றும் ஊழல் வழக்குகளில் சிக்குவோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அதிகாரிகள் கடமை எனவும் நிதிபதிகள் வைத்தியநாதன், நக்கீரன் ஆகியோர் ஆதங்கத்துடன் கருத்து கூறியுள்ளனர். மேலும், ஊழல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தவறுவோருக்கு […]
மக்களவையில் லஞ்சம் வாங்குவோருக்கும், கொடுப்போருக்கும் ஒரே அளவு தண்டனையை வழங்க வகைசெய்யும் ஊழல் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது. மக்களவையில் நிறைவேறிய இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம், லஞ்ச வழக்குகளுக்கான சிறைத்தண்டனை 3 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மீண்டும், மீண்டும் லஞ்சப் புகார்களில் சிக்குவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் இந்தச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.