பஞ்சாப்:இனி மக்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகத்தை தொடங்க முடிவு செய்துள்ளதாக பஞ்சாப் முதல்வர் பகவத் மான் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 92 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.இதனைத் தொடர்ந்து,கடந்த மார்ச் 16 ஆம் தேதி பஞ்சாப் மாநில முதல்வராக பகவத் மான் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில்,பஞ்சாப் மக்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகத்தை தொடங்க முடிவு செய்துள்ளதாகவும்,குடும்ப அட்டைதாரர்களிடம் நேரம் கேட்டு அதற்கேற்ப பொருட்கள் வீடு தேடி […]
திருவாரூர்:கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற தகவல் தவறானது என்று அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி,தற்போது கொரோனா பரவல் முன்பை விட ஓரளவுக்கு குறைந்துள்ளது. இதற்கிடையில்,தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற உருமாறிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்,இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இந்த வேளையில்,தமிழகத்தில் இனி கொரோனா […]
ரேசன் அட்டைதாரர்கள் உணவுப்பொருட்களை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ரேசன் குடும்ப அட்டைதாரர்கள் சிரமமின்றி உணவு பொருட்களை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது.அதன்படி, கைவிரல் ரேகை சரிபார்த்து அதனடிப்படையில் இன்றியமையாப் உணவுப்பொருட்கள் விநியோகம் மேற்கொள்ளும் போது கைவிரல்கள் ரேகைகள் தெளிவில்லாமல் இருந்தாலோ அல்லது பயோமெட்ரிக்தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாகவோ இருந்தாலும் உரிய ஆவணங்களை சரிபார்த்து,உண்மையான அட்டைதார்களுக்கு உணவுப்பொருட்கள் தங்குதடையின்றி வழங்கப்பட வேண்டுமென ஏற்கனவே அநேக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இது […]