தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் சில முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ஜூன் 9 ஆம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில்,வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேசன் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி,”NO Work No Pay” என்பதன் அடிப்படையில் சம்பளத்தை பிடித்தம் செய்ய மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும்,வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பதில் மாற்று ஏற்பாடு செய்து ரேசன் கடைகளை திறக்கவும் […]
தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் கண் கருவிழி பதிவு மூலம் ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டமானது சோதனையில் இருப்பதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்ற நிலையில்,இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி,நகர்ப்புற குடியிருப்பு மேம்பாட்டு வாரியத்துறை அமைச்சர் தாமோ அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து,செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது:செங்கல்பட்டு,காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 169 இடங்களில் நேரடி […]
தமிழ்நாட்டில் நாளை வழக்கம் போல ரேஷன் கடைகள் இயங்கும் என நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை நியாயவிலைக்கடைகள் இயங்கவில்லை இதனால், தமிழ்நாட்டில் நாளை வழக்கம் போல ரேஷன் கடைகள் இயங்கும் என நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது விநியோக திட்டத்தின்கீழ் ஜனவரி 2022-ம் மாதத்திற்கான அத்தியாவசிய […]