உத்தரகண்ட்டில் அரசு மருத்துவ கல்லூரியில் ஜூனியர்களை ரேகிங் செய்ததற்காக 44 சீனியர் மாணவர்களுக்கு 50 ஆயிரம் , 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹல்த்வானியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் ஜூனியர்களை ராகிங் செய்ததாக 44 மருத்துவ மாணவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த புகாரை அடுத்து, அவர்கள் மீது மருத்துவகல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட ஒரு மாணவர் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு அவருக்கு மட்டும் ரூபாய் 50,000 […]
மாணவர்களின் ரேகிங் செயல் உறுதிப்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட மாணவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கப்படுவர் என வேலூர் தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்தது. சில தினங்களுக்கு முன்னர் சேலம் தனியார் மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் ரேகிங் செய்து, மேலாடை இன்றி கல்லூரி வளாகத்தில் வரவழைத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் மிக வைரலானது. இந்த சம்பவம் குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கு மீதான விசாரணையின் போது, நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில், […]