திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேற்று முன் தினம் முதல் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாவட்டங்களில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்து, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன்காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இல்லங்களை விட்டு வெளியே செல்ல முடியாத அளவுக்கு ஏராளமான மக்கள் முடங்கியுள்ளனர். தென்மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு பெய்துவரும் கனமழை காரணமாக, தாமிரபரணி உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. […]
தொடர் கன மழை காரணமாக அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி விருதுநகர், மதுரை மற்றும் தேனி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல தூத்துக்குடி, குமரி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் மற்றும் சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ,அரியலூர், பெரம்பலூர், திருச்சி […]
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. இதனால், பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ள நிலையில், இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழல் மிக்ஜாம் புயல் தீவிர புயலாக வலுப்பெற்று உள்ளதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்றும் இன்று இரவுக்கு பிறகு படிப்படியாக மழை குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தீவிர […]
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், பகுதிகளில் அதீத கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளதால், இந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் பெய்த மழையால், பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சென்னையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனையின் தரைத்தளம் முழுவதும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மிக்ஜாம் புயல் எதிரொலி… சென்னையில் 20 விமானங்கள் ரத்து! இந்த […]
வங்கக்கடல் மற்றும் குமரிக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. அதேபோல குமரிக்கடலில் ஏற்பட்டுள்ள கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மட்டுமல்லாது கேரளாவிலும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி கேரளாவிலும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. […]
புயல் காரணமாக கனமழை பெய்யக்கூடும் என்பதால், வரும் 9-ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் இன்று புயலாக வலுப்பெற்று வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த பெயர் வைக்கப்பட உள்ளது. இன்று மற்றும் நாளை மிகக்கனமழை பெய்யக்கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து […]
புயல் காரணமாக கனமழை பெய்யக்கூடும் என்பதால், வரும் 9-ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் நாளை புயலாக வலுப்பெற்று வாடா தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என்றும், புளியல் சின்னம் காரணமாக இன்று கனமழை, நாளை மற்றும் நாளை மறுநாள் மிகக்கனமழை பெய்யக்கூடும் என பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வரும் வெள்ளிக்கிழமை மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு […]
திருவள்ளூர் , ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் வேலையில், தமிழக கடலோரபகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன் படி மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் , ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், […]
இந்திய வானிலை மையம் “ரெட் அலர்ட்” கொடுத்த பின்பும் மீனவர்களின் பாதுகாப்பில் அலட்சியப் போக்கோடு இருந்ததாக திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஈபிஎஸ் அறிக்கை. கடல் சீற்றம்,கனமழை அடுத்த சில நாட்களுக்கு இருக்குமென இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுத்த பின்பும் இந்த திமுக அரசு மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கை தகவலை அளிக்கவில்லை என கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘கடல் சீற்றம் மற்றும் கனமழை அடுத்த சில […]
நெல்லைக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ள நிலையில் கட்டுப்பாட்டி அறை எண் அறிவிப்பு. அடுத்த 3 நாட்களில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்கு அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் இந்த 3 மாவட்டத்திற்கும் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. நெல்லைக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ள நிலையில் கட்டுப்பாட்டி அறை எண்ணை அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி,மழை நீர் தேங்கும் நிலை ஏற்பட்டால் 1070 மற்றும் 0462-501012 எண்ணில் […]
தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது பல்வேறு இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் வருகிறது. இந்நிலையில், அடுத்த 3 நாட்களில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்கு அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் இந்த 3 மாவட்டத்திற்கும் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.
வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இவை வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்றும்,நாளையும் அதிக மழை: இதனைத் தொடர்ந்து,அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக,இன்றும்,நாளையும் அந்தமான் நிகோபார் பகுதிகளில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும்,அதிக கனமழை […]
வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது. அசானி புயல்: மேலும்,ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை புயலாகவும் வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.இந்த புயலுக்கு ‘அசானி’ என பெயரிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில்: இந்நிலையில்,வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]
சென்னை:புயல் போன்ற ‘ரெட் அலர்ட்’ சூழ்நிலைகளை துரிதமாக முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு அடிக்கடி வெள்ளம்,பெருமழை போன்ற இயற்கை இடர்பாடுகளினால் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு தக்க நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செயல்பாட்டினை மேம்படுத்திட வேண்டும் என்று கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா […]
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். கனமழை பெய்து வரும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, ஆரஞ்ச் அலர்ட் விடுத்திருந்த நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 4 மாவட்டங்களில் மழை தொடரும் என எச்சரிக்கை […]
இன்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று கீழ்க்கண்ட இந்த 5 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதால் நெல்லை, தென்காசி,தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்த நிலையில்,இன்றைய தினமும் மழை நீடித்து வருகிறது. இந்நிலையில்,இன்றும் மிக பலத்த மழை தொடரும் என்று 5 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை […]
5 மாவட்டத்த்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுப்பு. வானிலை ஆய்வு மையம் மிக பலத்த மழை பெய்யும் என்று 5 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தென்காசிக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இன்று காலை முதல் தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதால் நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிகப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தூத்துக்குடியை தொடர்ந்து நெல்லை, தென்காசிக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களில் பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்தது. அதன்படி, தற்போது தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை 08:30 மணி முதல் மாலை 04:30 மணி வரை திருச்செந்தூரில் 18 , தூத்துக்குடியில் 14 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. […]
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளை தெற்கு ஆந்திரா வட தமிழக கடற்கரை நோக்கி நகருவதால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையத்தால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை வரை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]