சென்னை:கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50,000 நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50,000 நிவாரணத் தொகை அறிவித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.அதனடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்கள் அரசின் இழப்பீட்டு உதவித் தொகை பெறுவதை எளிமையாக்கும் வகையில் https://www.tn.gov.in என்னும் தமிழ்நாடு அரசு இணையதள முகவரியில் “வாட்ஸ் நியூ (what’s new) பகுதியில் “Ex-Gratis for Covid-19” என்னும் விண்ணப்பத்திற்கான இணைப்பை […]