ரூ.100 கோடி சொத்து குவித்த மின்துறை வாரிய அதிகாரி..!
ஆந்திர மாநிலம் நெல்லூரில் கலாளியில் உள்ள மின்துறை அலுவலகத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் லட்சுமி ரெட்டி. இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் லட்சுமிரெட்டி வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். நெல்லூர் மற்றும் பிரகாசம் மாவட்டங்களில் உள்ள வீடுகள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடந்தது. இதில் பல ஏக்கர் விவசாய நிலங்களின் பத்திரங்கள், ஆடம்பர பங்களா, கார்கள், வங்கியில் […]