சமீப வருடங்களாக இங்கிலாந்தில் வந்து குடியேறுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் மக்கள் தொகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் புதிய விதிமுறைகளை அறிஇவிவித்துள்ளார். இதன் மூலம் மறைமுகமாக இங்கிலாந்து நாட்டின் நிகர இடம்பெயர்வு அளவை குறைக்க முடியும் என ரிஷி சுனக் உறுதியாக உள்ளார். அவர் இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிடுகையில், ‘ இங்கிலாந்து நாட்டிற்குவரும் நிகர இடம்பெயர்வை குறைக்க […]
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்த ப.சிதம்பரம் மற்றும் சசிதரூர் கருத்துக்கு , பாஜக செய்தி தொடர்பாளர் , ‘ சில காரணங்களுக்காக டாக்டர் மன்மோகன் சிங்கை பாரத பிரதமராக ப.சிதம்பரமும், சசி தரூரும் உண்மையாகவே ஒருபோதும் கருத்தமாட்டார்கள்.’ என விமர்சித்துள்ளார். இங்கிலாந்து புதிய பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்றுள்ளார். இவருக்கு இந்திய தலைவர்கள் பலரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்படஏராளமானோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே போல, காங்கிரஸ் […]
இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற ரிஷி சுனக்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து. இந்திய வம்சாவளியைச்சேர்ந்த ரிஷி சுனக், நேற்று மன்னர் மூன்றாம் சார்லஸ்-ஐ சந்தித்த பின்பு பதவியேற்றுக்கொண்டார். இவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்கள். இதன் மூலம் இந்தியா – இங்கிலாந்தின் உறவு மேலும் வலுப்பெறும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார். […]
இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் மறைவின்போது பிரதமர் பதவியில் இருந்து பணியாற்றியதில் நான் பெருமை கொள்கிறேன். – பிரதமர் பதவியில் இருந்து விலகிய லிஸ் டிரஸ் உரையாற்றினார் . பிரதமர் பதவியில் வெறும் 6 வாரங்களே பதவியில் இருந்த லிஸ் டிரஸ் அண்மையில் தனது ராஜினாமாவை அறிவித்தார். அதன் பிறகு தான் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் இன்று பிரதமராக பொறுப்பேற்று கொண்டார். லிஸ் டிரஸ் பதவியில் இருந்த அந்த காலகட்டத்தில் தான் இங்கிலாந்து மகாராணி எலிசபெத் உயிரிழந்தார். […]
நான் பிரதமரானால் இங்கிலாந்தின் குடியேற்ற முறையில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று ரிஷி சுனக் உறுதியளித்தார். இங்கிலாந்தின் பிரதமராகும் போட்டியில் இறுதிப் போட்டியாளராக உள்ள இருவரில் ஒருவரான முன்னாள் இங்கிலாந்து நிதி அமைச்சர் ரிஷி சுனக், நான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இங்கிலாந்தின் “உடைந்த” குடியேற்ற முறையை சரிசெய்வேன் என்று உறுதியளித்தார். மேலும் பிரிட்டிஷ் இந்தியத் தலைவர், நெருக்கடியைத் தீர்க்க பத்து அம்சத் திட்டத்தையும் வெளியிட்டார். ஆண்டுதோறும் ஏற்றுக்கொள்ளப்படும் அகதிகளின் எண்ணிக்கையை நாடாளுமன்றம் தீர்மானிக்கும் என்று கூறினார்.
இங்கிலாந்து பிரதமர் வேட்பாளராக இறுதி கட்ட போட்டிக்கு இந்திய வம்சாவளி நபர் ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு போட்டியாக லிஸ் டிரஸ் களத்தில் இருக்கிறார். இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த பதவிக்கு போட்டி பலமானது. இதில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் , லிஸ் டிரஸ், பென்னி உட்பட 8 பேர் போட்டி போட்டனர். இதில் இதுவரை நடைபெற்று சுற்று வாக்கெடுப்பில் ரிஷி சுனக் 137 வாக்குகள் […]
பிரிட்டன் பிரதமர் போட்டியில் தொடந்து முன்னிலையில் ரிஷி சுனக். பிரிட்டன் நாட்டில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி நடத்தி வரும் நிலையில், கட்சியினரின் கடும் அழுத்தம் காரணமாக பிரிட்டன் நாட்டின் பிரதமர் பதவியை, போரிஸ் ஜான்சன் ஜூலை 7ஆம் தேதி ராஜினாமா செய்தார். இந்நிலையில், புதிய பிரதமரை தேர்வு செய்வதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது கன்சர்வேடிவ் கட்சி. புதிய பிரதமர் பதவிக்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் என்பவரும் முன்னணி வேட்பாளராக உள்ளார். இவரைத் தொடர்ந்து […]
யாரை வேண்டுமாலும் பிரதமராக தேர்ந்தெடுங்கள். ஆனால், ரிஷி சுனக் வேண்டாம் என்பது போல தனது கருத்தை நண்பர்களிடம் பகிர்ந்துள்ளார் போரிஸ் ஜான்சன். பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். தனக்கு எதிரான நிலைப்பாடு தனது கட்சிக்குள் எழுந்த காரணத்தால் கட்சி தலைவர் பதவி, பிரதமர் பதவி இரண்டையும் ராஜினாமா செய்தார். இதனால் தற்போது அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் வரையில் தற்காலிக பிரதமராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பிரதமர் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று […]