வங்ககடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை, கொளத்தூர், திரு.வி.க நகர் 15 செ.மீ. மழையும், அம்பத்தூரில் 14 செ.மீ. மழையும் அதிகபட்சமாக மழை பதிவாகியுள்ளது. சென்னையில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு […]