வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமுமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக நீடிக்கிறது. ரெப்போ வட்டி விகிதத்தில் 6-வது முறையாக ரிசர்வ் வங்கி மாற்றம் எதுவும் செய்யவில்லை. ரெப்போ வட்டி விகிதம் கடைசியாக 2023 பிப்ரவரி மாதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போது […]
மருத்துவமனை, கல்வி நிலையங்களில் யுபிஐ மூலம் இனி ரூ.5 லட்சம் வரை பணப்பரிவர்த்தனை செய்யலாம் என்று ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் டிசம்பர் மாத நிதிக்கொள்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சக்திகாந்த் தாஸ், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5வது முறையாக மாற்றம் இன்றி 6.5% ஆக தொடரும். நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதால், ரெப்போ வட்டி விகிதத்தில் […]
சில்லறை பணப் பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை இன்று அறிமுகம் செய்கிறது இந்திய ரிசர்வ் வங்கி. நாட்டில் சில்லறை பணப் பரிவர்த்தனைக்கான (first pilot) டிஜிட்டல் ரூபாயை இன்று இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்கிறது. 2022 மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்த நிலையில், இன்று நாட்டின் முதல் டிஜிட்டல் ரூபாயை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்கிறது. இதுதொடர்பாக […]
நாடு முழுவதும் சோதனை முறையில் நாளை டிஜிட்டல் நாணயம் அறிமுகம். நாடு முழுவதும் சோதனை முறையில் நாளை டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரிசர்வ் வாங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, பாரத் ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, உள்ளிட்ட 9 வங்கிகள் மூலம் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
உணர்ச்சித் தூண்டல் அரசியலே போதும் என்ற மிதப்பில் மோடி ஆட்சி வெகுதூரம் சென்றுவிட்டது என கே.பாலகிருஷ்ணன் ட்வீட். ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்தி 5.90% ஆக ஆக்கியுள்ளது. இதற்க்கு கே.பாலகிருஷ்ணன் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்தி 5.90% ஆக ஆக்கியுள்ளது. இதனால் வீட்டுக்கடன், வங்கிக்கடன் மற்றும் பிற EMI வட்டி விகிதம் உயரும். சாதாரண உழைப்பாளிகளின் துயரம் அதிகரிக்கும். ரூபாய் […]
பணவீக்கத்தை கட்டுப்படுத்த கடன்களுக்கான வட்டி விகிதத்தை கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதிகரித்தது. அதன்படி,36 நாட்களில் வட்டியை 0.90% விகிதங்களை உயர்த்தியது.இதனால்,வாகனங்கள்,வீடு,தனிநபர் கடன் உள்ளிட்டவைகளுக்கான வட்டி விகிதங்களும் உயர்த்தப்பட்டன. இந்நிலையில்,வாடிக்கையாளர்களுக்கு சற்று மகிழ்ச்சி தரும் வகையில்,வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கும் டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.அதன்படி, பாரத ஸ்டேட் வங்கி:சாதாரண குடிமக்களின் வட்டி விகிதத்தை,2.90% முதல் 5.50% வரையும்,மூத்த குடிமக்களுக்கு 3.40% முதல் 6.30% வரையிலான விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. HDFC வங்கி:சாதாரண குடிமக்களுக்கு,2.75% […]
வாடிக்கையாளர்களின் நலன் கருதி,சமீபத்தில் கிரெடிட் கார்டு விதிமுறைகளை ரிசர்வ் வங்கி(RBI) வெளியிட்டது.அதன் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பில்லிங் சுழற்சியை மாற்றியமைக்க ஒரு முறை வாய்ப்பை(one time modification) வழங்க வேண்டும் என்று ஆர்பிஐ பரிந்துரைத்துள்ளது. பொதுவாக,பில்லிங் சுழற்சி அல்லது பில்லிங் காலம் என்பது கார்டு-வழங்குபவர் செய்யும் இரண்டு தொடர்ச்சியான பில்களின் இறுதித் தேதிகளுக்கு இடையே உள்ள கால இடைவெளி ஆகும்.மேலும்,கிரெடிட் கார்டில்,கட்டணம் செலுத்தும் தேதி பொதுவாக பில்லிங் காலம் முடிந்த 15-25 நாட்களுக்குப் […]
ATM மையங்களில், credit மற்றும் debit கார்டுகள் இல்லாமல் பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வாங்கி ஆளுநர் சக்தி கந்ததாஸ் தெரிவித்துள்ளார். நம்மில் அதிகமானோர் பணம் எடுப்பதற்காக வங்கிகளை அணுகாமல், நமது credit மற்றும் debit கார்டுகளை பயன்படுத்தி தான் ATM-களில் பணம் எடுப்பதுண்டு. ஆனால், இந்த முறைகளிலும் பல மோசடிகளும், முறைகேடுகளும் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில், மத்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த […]
பணபரிவர்த்தனை விதிகளை முறையாக பின்பற்றாத காரணத்தால் Paytm payment வங்கியில் புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதை நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப தணிக்கை குழுவின் ஆய்வுக்கு பின் அனுமதி வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கு பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கிக்கு உடனடியாக தடை விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பேடிஎம் வங்கியின் ஐடி அமைப்பை தணிக்கை செய்ய ஐடி தணிக்கை நிறுவனம் […]
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ரிசர்வ் வங்கி ஊழியர்கள் மரியாதை செலுத்தாத நிலையில் ரிசர்வ் வங்கியின் தமிழக மண்டல மேலாளர் எஸ்.எம் சாமி நிதியமைச்சரை நேரில் சந்தித்து விளக்கமளித்தார். சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்ட போது எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் அலட்சியம் காட்டியுள்ளதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பத்திரிகையாளர்களுடன் […]
சென்னை:குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தாத விவகாரம் சர்ச்சையானதை அடுத்து,உரிய புகார் அளிக்கும் பட்சத்தில்,வீடியோ ஆதாரங்களை ஆய்வு செய்து, தமிழக அரசின் உத்தரவின்படி விசாரணை நடத்தப்படும் என சென்னை காவல்துறை தகவல். நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு,நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில்,தமிழகத்திலும் இன்று அரசு சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்,சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி […]
சென்னை:கிரிப்டோகரன்சி விளம்பரத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கிரிப்டோகரன்சி விளம்பரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நெல்லையை சேர்ந்த அய்யா என்பவர் மனு அளித்துள்ளார். அந்த மனுவில்,கிரிப்டோகரன்சிக்கு சட்டபூர்வ அங்கீகாரம் இல்லாததால் அதனைப் பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு,ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளன எனவும்,உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி விளம்பரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பட்டுள்ளார். மேலும்,அதிக வட்டி தருவதாக கூறி கேரளாவில் ரூ.100 கோடி […]
ரூபாய் நோட்டு கிழிந்து விட்டால் பொதுமக்கள் இனி எந்த வகையிலும் மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பொதுவாக ரூபாய் நோட்டுகள் கிழிந்து விட்டால் அல்லது கடையில் கொடுத்து மாற்ற முடியாத சூழ்நிலையில் இருந்தால் அந்த ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றுவதற்கு அந்தந்த மாநிலங்களின் தலைநகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு செல்ல வேண்டிய நிலை இதுவரை இருந்தது. எனவே மாநிலங்களின் தலைநகரங்களில் உள்ள மக்கள் மட்டுமே ரூபாய் நோட்டுகளை எளிதில் மாற்றிக் கொள்ள […]
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசு அறிவிப்பு. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக உள்ள சக்திகாந்த தாஸின் பதவியை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசின் கேபினட் நியமனங்களுக்கான குழு அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 10ம் தேதியுடன் சக்திகாந்த தாஸின் பதவி காலம் நிறைவடைய உள்ள நிலையில், மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் கடந்த 2018ஆம் ஆண்டு […]