மகாராஷ்டிராவில் இருந்து குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த் இன்று மாலை டெல்லி திரும்புவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்கடனுக்கு முப்படைகளின் தளபதி பிபின் ராவத்புறப்பட்டு சென்ற ராணுவ ஹெலிஹாப்டர் காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தற்போது வரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள முப்படை தளபதி பிபின் ராவத் இல்லத்திற்கு பல்வேறு அமைச்சர்கள் தனித்தனியாக வந்து பிபின் ராவத் மகளை சந்தித்து செல்கின்றனர். […]
இந்தியா 2025க்குள் 5 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி முன்னேறி கொண்டிருப்பதாக குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் தெரிவித்துள்ளார். மூன்று நாடுகள் பயணத்தின் ஒரு பகுதியாக கிரீஸ் சென்ற அவருக்கு பாரம்பரிய முறையிலான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் வேகமாக முன்னேறி வருவதாகத் தெரிவித்தார். மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் 2025-ஆம் ஆண்டில் 5 லட்சம் கோடி டாலர் என்ற வலுவான பொருளாதாரத்தையும், உலகின் […]
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று சைவ விருந்தளித்து உபசரித்தார். துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு சைவ விருந்தளித்து உபசரித்தார். இதுதொடர்பாக, புகைப்படத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள வெங்கையா நாயுடு, ‘ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தார் எனது வீட்டில் விருந்துண்டதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.