‘அக்னி பாதை’ திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் மநீம வலியுறுத்தல். அண்மையில் மத்திய அரசு அறிவித்த ‘அக்னி பாதை’ திட்டம் நாடு முழுவதும் கலவரத்தை உண்டாக்கியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு வீரர்களை ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்தால், புதிதாக சேருபவர்கள் மட்டுமல்ல, ஏற்கெனவே ராணுவத்தில் பணிபுரிபவர்களும் மனச் சோர்வடைவர். முப்படைகளிலும் 4 ஆண்டுகள் மட்டுமே வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் ‘அக்னி பாதை’ திட்டம், பெயருக்கேற்ப நாடு முழுவதும் ரயில்கள் எரிப்பு, வாகனங்களுக்கு தீவைப்பு என இளைஞர்களை […]
கடந்த சில மாதங்களாகவே எல்லையில் சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பு மட்டுமின்றி பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது இந்நிலையில் இந்தியாவும் இம்மி அளவு கூட விட்டுக்கொடுக்க முடியாது என்று நெஞ்சை நிமிர்த்து தனது அனைத்து படைகளையும் எல்லையில் அணிவகுத்து நிறுத்தி விட்டது இந்தியாவின் இந்த செயலை சற்றும் எதிர்பார்க்காத சீனா வாயை அடைத்து விட்டது. எல்லையில் வாலை ஆட்டிய சீனாவின் அடாவடித்தனத்தை ஒரு சக்காக சீனா அபகரிக்க நினைத்த மட்டுமின்றி அதன் சில பகுதிகளையும் இந்தியா தன் […]
இந்தியா – சீனா எல்லைகள் நிலவரம் குறித்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்- ராணுவ தலைமை தளபதி முகுந்த் நரவானே இருவரும் இடையே திடீர் சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய எல்லைப்பகுதியான லடாக்கின் சர்ச்சைக்குரியதாக சீனாவால் அத்துமீறி ஆக்கிரமிப்பு சம்பவத்தால் கடுமையான பதற்றம் நிலவி வந்தது.இந்நிலையில் முப்படை தளபதிகளும் தங்களது படைகளை சந்தித்த வண்ணம் இருந்தனர்.அதன் ஒரு நிகழ்வாக கடந்த வாரத்தில் எல்லை பகுதியில் ராணுவ வீரர்களை ராணுவ படைத்தளபதி முகுந்த் நரவானே சந்தித்து பேசினார். […]
இந்தியா-சீனா இடையே கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடும் மோதல் நடைபெற்று வருகிறது.மேலும் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தாலும் எல்லையில் இரு நாடுகளும் தங்களது படைகளையும்,ஆயுதங்களையும் குவித்து வருகிறது. இந்நிலையில் மூப்படைகளையும் தயார இருக்கும் படி இந்திய ராணுவத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் சீனாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சீன எல்லையில் உள்கட்டமைப்பு மேம்படுத்துவதை வேகப்படுத்த இந்தியா முடிவு எடுத்துள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.அதன்படி 2022ம் ஆண்டுக்குள் 42 சாலைகளை முடிக்க உள்ளதாக இந்திய ராணுவ அதிகாரிகள் […]
“11 மணி நேர பேச்சுவார்த்தைகள் “காற்றில் பறக்கவிட்டதைப் போல சீன ராணுவம் மீண்டும் எல்லையில் அத்துமீறி தனது ராணுவப் படைகளை குவித்து வருகிறது. இந்தியாவும் தனது அதிசக்தி வாய்ந்த பிஷ்மா பீரங்கியினை களத்தினை நோக்கி நகர்த்தி வருவதாக எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது சீனா கடந்த மாதம் மே.,யில்,இது குறித்தும் முகாம்கள் ,கட்டமைப்புகள் அகற்றுவது குறித்து இந்தியாவும் சீனாவும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போதும், சீன வீர்கள் விரல் பகுதி உட்பட உண்மையான […]
இந்தியப் பகுதிகள் சிலவற்றை உரிமை கொண்டாடும் சீனா வரையறுக்கப்பட்ட எல்லையைத் தாண்டிச் சாலை அமைக்கத் திட்டமிட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததை அடுத்துச் சாலை அமைக்கும் திட்டத்தைச் சீன ராணுவத்தினர் கைவிட்டனர். இந்நிலையில் எல்லையில் உள்ள இந்திய ராணுவத்தினரும், இந்தோ-திபெத் எல்லைக் காவல்படையினரும் கடுமையாக நடந்துகொள்வதாகச் சீன ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்திய ராணுவம், பாங்கோங் சோ என்னுமிடத்தில் சீன ராணுவ வீரர்களே அச்சுறுத்தும் வகையில் இரும்புக் கம்பிகளையும் தடிகளையும் வைத்திருந்ததாகத் […]