ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் தங்கியிருந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (96) உடல் நலக்குறைவால் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். பிரிட்டனின் மிகவும் நீண்ட காலம் ராணியாக இருந்தவர், 96 வயதான ராணி இரண்டாம் எலிசபெத். 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 6 முதல் ராணியாக தனது ஆட்சியை ஆரம்பித்தார். 70 ஆண்டுகள் ராணியாக இருந்த அவர், பிரிட்டன் ஆட்சி வரலாற்றில் மிக அதிக காலம் ராணியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் எலிசபெத்தின் உடல் பால்மோரல் […]
இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது 96 வயதில் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு அவரது மகன் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக அதிகாரபூர்வமாக நேற்று பதவியேற்றார். இந்தியா முழுவதும் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கபடுவதாக செப்டம்பர் 9 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் டெல்லியில் உள்ள செங்கோட்டை மற்றும் குடியரசுத்தலைவர் மாளிகையில் இந்திய தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.மேலும், இன்று அரசு நிகழ்ச்சிகள் எதுவும் […]
பிரிட்டனை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த இரண்டாம் எலிசபெத் ராணி, 96 வயதில் காலமானார். இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் (73), ராணி இறந்த 24 மணி நேரத்திற்குள் புதிய அரசராக புனித ஜேம்ஸ் அரண்மனையில் உள்ள பிரைவி கவுன்சில் முன் பதவியேற்றார். இருப்பினும், சார்லஸின் முறையான முடிசூட்டு விழாவிற்கு சில மாதங்கள் அல்லது அதற்கு மேல் ஆகலாம். கிங் ஜார்ஜ் VI இறந்த பின், அவரது மகள் இரண்டாம் எலிசபெத் பிப்ரவரி […]
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாக பக்கிங்காம் அரண்மனை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. இரண்டாம் எலிசபெத் மகாராணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் உடல் நலக்குறைவு காரணமாக நடக்கவும், நிற்கவும் சிரமப்பட்டார்.அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு செய்யப்பட்டப்பின் இரண்டாம் எலிசபெத்தை சந்தித்தார்.அதன் பின்னர் லிஸ் ட்ரஸ் புதிய பிரதமராக அறிவித்தார் இரண்டாம் எலிசபெத். […]