250 உறுப்பினர்களைக் கொண்ட ராஜ்யசபாவின் உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். இந்த ஆறு ஆண்டுகள் முடிந்து தற்போது 56 மாநிலங்களவை (ராஜ்ய சபை) எம்பி இடங்கள் காலியாக உள்ளன. இந்த ராஜ்ய சபா எம்பிக்களை மாநில எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுப்பர். ஆளும் கட்சிக்கு அதிக மாநிலங்களவை உறுப்பினர்களும், எதிர்க்கட்சிகளுக்கு குறைவான ராஜ்யசபா உறுப்பினர்களும், மற்ற கட்சிகளுக்கு அவர்களின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கையை வைத்து மாநில ராஜ்யசபா எம்பி சீட் நிர்ணயம் செய்யப்படும். ராமர் கோவில் திறப்புக்கு ஜனாதிபதியை அழைக்காததற்கு […]
இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதற்காக கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரானது நாளை வரையில் நடைபெற உள்ளது. இன்று 7வது நாளாக மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் வழக்கமான விவாத நிகழ்வுகளுக்கு கூட்டத்தொடர் காலை 11 மணியளவில் தொடங்கியது. டெல்லியில் திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்! இன்றைய கூட்டத்தொடரில், பதவி காலம் நிறைவடையும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் […]
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி புதன்கிழமை அன்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. அதனை அடுத்து நேற்று பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் நிகழ்வுக்கு அடுத்ததாக வழக்கமான நிகழ்வுகளுக்காக நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய நாடாளுமன்ற கூட்டத்தில் ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் […]
தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன்10-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்தது.அதன்படி,தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10 இல் தேர்தல் நடைபெறுகிறது. இதனிடையே,தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் ஜூன் 29ல் முடிவடைய உள்ள நிலையில்,தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஆர்எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவன்,ராஜேஸ்குமார், நவநீதகிருஷ்ணன், எஸ்ஆர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஏ.விஜயகுமார் ஆகிய 6 எம்பிகளின் […]
ராஜ்யசபா உறுப்பினராக திமுகவின் கனிமொழி சோமு,ராஜேஷ் குமார் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். தமிழகத்தில் அதிமுகவின் வைத்திலிங்கம் ,கேபி முனுசாமி ஆகியோர் முன்னதாக தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.இதனையடுத்து,தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அப்பதவிக்காக ,திமுகவின் கனிமொழி ,ராஜேஷ்குமார் ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். இந்நிலையில்,இன்று மதியம் 3 மணியுடன் வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான,கால அவகாசம் முடிவடைந்து விட்டதால்,ராஜ்யசபா எம்பியாக திமுகவின் கனிமொழி ,ராஜேஷ் குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அதற்கான ஆணையும்வழங்கப்பட்டுள்ளது.இருவரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில் போட்டியின்றி தேர்வானதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். […]