நாடு முழுவதும் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் முன்னதாக கொரோனா தொற்று தீவிரமாக பரவி,மக்கள் பலரும் இறந்த நிலையில்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டன.அந்த வகையில்,கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு,கொரோனா தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. […]