முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லி வீர் பூமியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவு இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் தனது தந்தையின் நினைவு தினத்தையொட்டி ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் வெறுப்பு உணர்ச்சியை கொண்டுள்ளவர்கள் அதற்கு சிறைபட்டவர்கள் ஆவர் என எனது தந்தை எனக்கு […]