நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா தீவிரமாகப் பரவிய நிலையில்,கொரோனா நோயாளிகளால் மருத்துவமனை நிரம்பி காணப்பட்டது.இதன்காரணமாக,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.இதனால்,தற்போது கொரோனா பரவல் அதிக அளவில் குறைந்து உள்ளது. இந்நிலையில்,சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் இருந்த அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியதால் ராஜீவ்காந்தி […]
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகைசால் தமிழர் தோழர் என். சங்கரய்யா அவர்கள் விரைவில் முழுநலம் பெற்றுத் திரும்பிட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரரும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் என்.சங்கரய்யா அவர்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு இரண்டு தினங்களாக லேசான காய்ச்சல் இருந்த காரணத்தினால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.இதனையடுத்து,அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.இதனைத் தொடர்ந்து,சிகிச்சைக்காக […]