1997 இல் நடந்த சம்பவத்துக்கு தற்போது ராகுல் ட்ராவிட்டிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஆலன் டொனால்டு. தென் ஆப்பிரிக்கா முன்னாள் வேகப்பந்துவீச்சாளரும் தற்போதைய வங்கதேசத்தின் பௌலிங் பயிற்சியாளருமான ஆலன் டொனால்டு, 1997 ஆம் ஆண்டு இந்தியாவுடன் நடந்த போட்டியின் போது நடந்த சம்பவத்திற்கு தற்போது ராகுல் டிராவிட்டிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆலன் டொனால்டு அவர் விளையாடும் சமயத்தில் மிகச் சிறந்த பந்துவீச்சாளராக திகழ்ந்து வந்தார். எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வந்த ஆலன் டொனால்ட், […]