புகழ் பெற்ற வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் ராகிங் புகாரில் ஏழு மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் ராணிப்பேட்டை கிறிஸ்டியன் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை, சீனியர் மாணவர்கள் ராகிங் செய்யும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . அதில் முதலாம் ஆண்டு மாணவர்களை, சீனியர்கள் மிரட்டி தண்டால் எடுக்க செய்வது,தண்ணீரை பீச்சி அடிப்பது,அரை டவுசருடன் ஓட விடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து புகார்கள் எழுந்த நிலையில், ஏழு சீனியர் […]
ஜூனியர்களை ராகிங் செய்ததாக செய்ததற்காக குற்றம் சாட்டப்பட்ட 5 பொறியியல் மாணவர்களை விடுவித்து கொல்லம் பொது மருத்துவமனையில் 2 வார காலத்திற்கு சமூக சேவை செய்ய கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்களுக்கு எதிரான ராகிங் வழக்கை ரத்து செய்யக்கோரி, கொல்லம் டி.கே.எம் பொறியியல் கல்லூரி மாணவர்களான எம்.எஸ்.ஹரிகிருஷ்ணன், எம்.சாஹல்முகமது, அபிஷேக் அனந்தராமன், நபன் அனிஷ், அஸ்வின் மனோகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்தது. கொல்லம் பொது மருத்துவமனையில் இரண்டு வாரங்களுக்கு ஒரு […]
ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு. ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என மாணவரும், பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆன்லைனில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. www.antiragging.in என்ற இணையதளத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மேலும். www.amanmovement.org என்ற இணையதளத்திலும் தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது. மேற்கண்ட இணையதளங்களில் பதிவு செய்து பல்கலைக்கழகம் சிறப்பு அலுவலருக்கு அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது. அண்ணா […]