ஸ்ரீநகரில் நடந்த துப்பாக்கிசூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஜம்மு- காஷ்மீர் ஸ்ரீநகர் அருகே டவுன்-டவுன் ரெய்னாவாரி பகுதியில் நேற்று நள்ளிரவுக்குப் பிறகு நடந்த என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற சாதனங்கள் மீட்கப்பட்டன. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இருவரும் உள்ளூர்வாசிகள் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். பயங்கரவாதிகளில் ஒருவரான ஷாபாத் வீரி பிஜ்பெஹாராவில் வசிக்கும் அப்துல் ஹமீத் பட்டின் மகன் ரயீஸ் அகமது பட் முன்பு […]