கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை மீண்டும் வழங்குவதற்கான திட்டம் இல்லை. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை மீண்டும் வழங்குவதற்கான திட்டம் இல்லை என ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் மக்களவையில் தெரிவித்துள்ளார். மேலும், பயணிகளுக்கு ரூ.59,000 கோடி அளவுக்கு கட்டண சலுகை வழங்குவதாகவும், சில மாநிலங்களின் ஆண்டு பட்ஜெட்டை இது கூடுதலாக இருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மூத்த குடிமகன்களுக்கான ரயில் கட்டண சலுகை நிராகரிப்பு குறித்து வெங்கடேசன் எம்.பி ட்வீட். மூத்த குடிமகன்களுக்கான ரயில் கட்டண சலுகை நிராகரித்துள்ளது அரசாங்கத்தின் செயல் இரக்கமற்றது என்று சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை மீள்வது குறித்து நான் 20.10.2021 எழுதிய கடிதத்திற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் 21.03.2022 அன்று பதில் அளித்துள்ளார். 2020 – 21 […]