பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால், மக்கள் அதிகளவில் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால், நெல்லை, தூத்துக்குடி, மதுரை ஆகிய தென் மாவட்டங்களுக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சொந்த ஊர்களுக்கு செல்வோர்களுக்கு எதுவாகவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஞாயிறு, செவ்வாய் கிழமையில் (ஜன. 14, 16) தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு […]
டெல்லி:தனியார் மற்றும் மாநில அரசுகளின் சுற்றுலா நிறுவனங்கள் ரயில்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது. மத்திய அரசுக்கு மிகப்பெரிய வருவாயை அளிக்கும் இந்திய ரயில்வே துறையானது,தற்போது ஒரு முக்கிய திட்டத்தை அறிவித்துள்ளது.இதன் கீழ் தனியார் மற்றும் மாநில அரசுகளின் சுற்றுலா நிறுவனங்கள் ரயில்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் மற்றும் அதற்கான உரிய வாடகைக் கட்டணங்களை அந்நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்த ரயில்களுக்கு ‘பாரத் கவுரவ் ரயில்’ […]