தென் கொரியாவின் யோன்பியோங் தீவு அருகே இன்று காலை வட கொரியா 200 க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகளை வீசியுள்ளது. இதனையடுத்து, யோன்பியோங் தீவில் உள்ள பொதுமக்களை உடனடியாக வெளியேறுமாறு தென் கொரியா கேட்டுக் கொண்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென் கொரிய இராணுவத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக யோன்பியோங் கிராம அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம் தகவல் தெரிவித்துள்ளார். வட கொரியா தாக்கிய குண்டுகளால் தென் கொரியாவில் எந்த சேதமும் ஏற்படவில்லை. மேலும், […]