பொட்டாஷ் விலை உயர்வு,தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளின் சிக்கலுக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகளின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது வருத்தமளிப்பதாகவும்,அனைத்து உரங்களுக்கும் நிலையான விலையை நிர்ணயித்து, வேறுபாட்டுத் தொகையை உர நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கும் பழைய திட்டத்தையே மீண்டும் செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது […]
தமிழகத்திற்கு 90,000 மெட்ரிக் டன் யூரியா உரத்தை ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. யூரியா தட்டுப்பாடு உள்ளதாக புகார் தெரிவித்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை தொடர்ந்து யூரியா உரத்தை ஒதுக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட யூரியா உரம் காரைக்கால் துறைமுகத்திற்கு விரைவில் வரவுள்ளது. காரைக்காலில் இருப்பில் உள்ள 4,000 மெட்ரிக் டன் யூரியா ரயிலில் தமிழகத்தின் மாவட்டங்களுக்கு அனுப்பப்படும். அக்டோபர் இறுதிக்குள் ஸ்பிக் 10,000 மெட்ரிக் […]