You Tube : உங்கள் சேனலில் விடீயோக்களை டெலீட் செய்தால் உங்கள் YouTube சேனலுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகும். தற்போதைய நவீன பொழுதுபோக்கு உலகில் youtube தளத்தின் பயன்பாடு என்பது மிக அதிகமாகவே உள்ளது. அதனைப் பொழுதுபோக்கு தளமாக உபயோகிப்பவர்களை போலவே, அதன் மூலம் வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகமாகிக்கொண்டே வருகிறது. பல youtube சேனல்கள் நல்ல விதமாக மக்களை கவரும் விதத்தில் வீடியோக்கள் போட்டு அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர். ஒரு […]
நமக்கு பொழுதுபோகவில்லை என்றால் படங்கள் பார்ப்பது, பாடல்கள் கேட்பதை வழக்கமாக வைத்துள்ளோம். அதிலும் படங்களை டிவியில் பார்ப்பதை விட நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் படம் பார்ப்பதற்காக உள்ள பயன்பாடுகளில் தான் அதிகமாகப் பார்க்கிறோம். அத்தகைய பயன்பாடுகளில் ஒன்றுதான் கூகுள் நிறுவனத்தின் கூகுள் ப்ளே மூவீஸ் அண்ட் டிவி. இதில் நமக்கு வேண்டிய திரைப்படங்களையும் டிவி நிகழ்ச்சிகளையும் வாடகைக்கு எடுத்தும் பார்க்கலாம். சொந்தமாக வாங்கியும் கூட வாங்கலாம். இவ்வாறு செய்யும்போது நீங்கள் வாஙகி வைத்திருக்கும் எந்தவோரு படத்தையும் […]
உலகின் மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப், புதிய அம்சமான பிளேயபிள்ஸ்-ஐ (Playables) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்தின் மூலம், பயனர்கள் யூடியூப்பில் வீடியோக்கள் மட்டுமல்லாமல் நேரடியாக கேம்களையும் விளையாடலாம். இதற்கு பயனர்கள் எந்தவொரு கேமையும் டவுன்லோட் செய்யவோ அல்லது இன்ஸ்டால் செய்யவோ தேவையில்லை. இந்த அம்சம், பயனர்களுக்கு பல்வேறு வகையான நன்மைகளை வழங்குகிறது. முதலாவதாக, இது பயனர்களுக்கு புதிய கேம்களை முயற்சிக்க ஒரு எளிய வழியை வழங்குகிறது. பயனர்கள் எந்தவொரு பயன்பாட்டையும் பதிவிறக்கம் செய்யாமல், யூடியூப்பில் இருந்து […]
நாம் இதுவரை பல ஆப்களில் கேம்களை விளையாடி இருப்போம் அல்லது தனித்தனியாக பதிவிறக்கம் செய்து விளையாடி இருக்கிறோம். ஆனால் இப்பொழுது பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் பயன்பாடான யூடியூப்பில் இப்பொழுது கேம் விளையாடும் ‘யூடியூப் பிளேயபிள்ஸ்’ (Google Playables) அம்சத்தை கூகுள் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. யூடியூப்பை மிகவும் வெற்றிகரமான தயாரிப்பாக மாற்றவும், யூடியூப்பில் பல்வேறு கேமிங் பிரியர்களை ஈர்க்கவும் இந்த அம்சத்தை கூகுள் வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய அம்சம் மூலம் பயனர்கள் பல்வேறு கேம்களை பதிவிறக்கம் செய்யாமலோ […]
கடலூர் புதுப்பாளையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக கூடிய டிடிஎப் வாசனின் ரசிகர்களை போலீசார் விரட்டியடித்து கலைத்துள்ளனர். யூடியூபில் விதமான பைக்குளில் வெவ்வேறு இடங்களுக்கு சென்று வீடியோ பதிவிட்டு இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக 2K கிட்ஸ்கள் மத்தியில் மிக பிரபலமான யு-டியூர் டிடிஎஃப் வாசன். இவர் இன்று கடலூர் புதுப்பாளையம் அருகே வந்துள்ளார். இவரை காணுவதற்காக அப்பகுதியில் உள்ள இவரது ரசிகர்கள் குவிந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் வந்து போக்குவரத்தை சரிசெய்யும் […]
யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல்கள் வழங்க விருப்பப்பட்டால் கட்சியின் அனுமதி பெற வேண்டும் என அண்ணாமலை வேண்டுகோள். பாஜகவை சேர்ந்த சிலர் யூடியூப் சேனல்களின் நேர்காணலில் கட்சியின் நிலைப்பாடுகளை விடுத்து சொந்த கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் கட்சியின் ஒப்புதல் பெற்ற பின்பே நேர்காணல்கள் வழங்க வேண்டும் என அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நமது கட்சியின் கருத்துக்களை, சித்தாந்தங்களைப் பதிவிடுவதற்கும், எதிர்க் கட்சிகளின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டுவதற்கும் சமூக வலைத்தளங்கள் பெரிதளவு பயன்படுத்தப்படுகிறது. சமீபகாலமாகத் […]
பிரபல யூடியூப் (YouTube) நிறுவனம், ஷார்ட்ஸ் வீடியோ உருவாக்குபவர்களுக்கு அதன் விளம்பர வருவாயில் 45% சதவீதத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது. கூகுளுக்குச் சொந்தமான யூடியூப் (YouTube) நிறுவனம், அதன் வளர்ந்து வரும் ஒரு பகுதியான ஷார்ட்ஸில் விளம்பரத்தை அறிமுகப்படுத்த உள்ளது. மேலும் ஷார்ட்ஸில், வீடியோ உருவாக்குபவர்களுக்கு 45 சதவீத வருவாய் அளிக்கவுள்ளது. டிக்டாக் போன்று யூடியூப்பிலும் படைப்பாளிகள், குறுகிய அளவில் வீடியோ வெளியிட்டு அதன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான வழியை யூடியூப் (YouTube) நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2020ஆம் ஆண்டில் […]
யூடியூப் பக்கத்தில் தவறான தகவலைகளை பரப்பி, அதிகமான வியூஸ்களை பெற்று வந்த ஐ.டி ஊழியர் கைது. இன்று பலரும் யூடியூப் சேனல் தொடங்கி நடத்தி வருகின்றனர். அதில் பலர் வருமானம் ஈட்டியும் வருகின்றனர். அந்த வகையில், சிலர் தாங்கள் அதிகமான வியூஸ் பெற வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல்களையும் பரப்பி வருகின்றனர். இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஜனார்த்தனன் என்ற ஐ.டி ஊழியர் தனது யூடியூப் பக்கத்தில் தவறான தகவலைகளை பரப்பி, அதிகமான வியூஸ்களை பெற்று […]
2021-22 ஆம் ஆண்டில், இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்ட 94 யூடியூப் சேனல்கள், 19 சமூக ஊடக கணக்குகள் மற்றும் 747 இணையதள பக்கங்கள் ஆகியவற்றை அரசாங்கம் முடக்கியதாகவும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ன் 69A பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். பாஜக எம்பி ராகேஷ் சின்ஹா, ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் போலி கணக்குகளைப் பயன்படுத்தி “இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தில்” ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை […]
கடந்த 3 மாதத்தில் 44 லட்சம் யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக சமூக வழிகாட்டுமுறைகள் அமலாக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது. இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே யூடியூப் சேனல்களை பயன்படுத்துவதுண்டு. அந்த வகையில், இன்று பலரும் யூடியூப் சேனல் மூலம் பணம் சம்பாதிப்பதற்காக, சேனல்களை தொடங்கி நடத்தி வருகின்றனர். இதன் மூலம் பலரும் வருவாய் ஈட்டியும் வருகின்றனர். இந்த நிலையில், யூடியூப் சேனல்களில் உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பும் சேனல்கள் மற்றும் ஸ்பாம் சேனல்களை யூடியூப் நிறுவனம் […]
பிரதமர் மோடியின் யூடியூப் சேனலை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது. தற்போது இந்திய பிரதமராக உள்ள நரேந்திர மோடி அவர்கள் கடந்த 2007ஆம் ஆண்டு குஜராத் முதல் மந்திரியாக இருந்தபோது யூடியூப் சேனலை தொடங்கினார். பிரதமர் மோடியை பொறுத்தவரையில் எப்பொழுதுமே சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வருபவர் என்று கூறலாம். இந்நிலையில், தற்போது பிரதமர் மோடியின் யூடியூப் சேனலை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது. உலக தலைவர்களில் இந்த எண்ணிக்கை எட்டிய முதல் தலைவர் பிரதமர் […]
மதுரை:ஒருவர் தவறு செய்ய துணைபுரிந்தால் யூடியூப்பும் குற்றவாளிதான் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. ஒருவர் தவறு செய்ய துணை புரிந்தால் சட்டப்படி யூடியூப்பும் குற்றவாளிதான் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.ஏனெனில்,யூடியூப்பை பார்த்து துப்பாக்கி,வெடிகுண்டு தயாரிப்பது,கள்ளச்சாராயம் காய்ச்சுவது என குற்றவாளிகள் பலரும் வாக்குமூலம் தருகின்றனர்.எனவே,அறிவியல் வளர்ச்சியை தவறாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.மேலும்,வெளிமாநிலங்களில் இருந்து தேவையற்ற வீடியோ பதிவு செய்யப்படுகிறது என்றால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதே சமயம்,தவறான வீடியோக்கள் […]
யூ-ட்யூபை பார்த்து கணவரே செய்வதற்கு அது ரசம் வைப்பதோ, நூடுல்ஸ் செய்வதோ அல்ல. மகப்பேறு விஷயத்தில் சாகச முயற்சிகள், விளையாட்டுகள் கூடாது என அன்புமணி ராமதாஸ் ட்வீட். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த பனப்பாக்கத்தில் வசிக்கும் லோகநாதன் என்பவர் மரச்செக்கு எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு கடந்த 1 வருடத்திற்கு முன்பு கோமதி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. அவர் மனைவி கர்ப்பமான நிலையில், அவரது மனைவிக்கு கடந்த டிச.13 ஆம் தேதி குழந்தை பிறப்புக்கான டெலிவரி […]
ராணிப்பேட்டை:அரக்கோணத்தை அடுத்த பனப்பாக்கத்தில் லோகநாதன் என்பவர் யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழந்து பிறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. யூடியூப் பார்த்து பிரசவம் பார்க்கும் பழக்கம் மக்கள் சிலரிடையே ஏற்பட்டு வரும் நிலையில்,அவ்வாறு பிரசவம் பார்க்கக் கூடாது என்றும்,இதனால் குழந்தை மற்றும் தாயின் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என மருத்துவர்கள் தரப்பில் அவ்வப்போது அறிவுறுத்தப்படுகிறது. இந்த நிலையில்,அரக்கோணத்தை அடுத்த பனப்பாக்கத்தில் யூடியூப் பார்த்து மனைவிக்கு கணவர் பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழந்து பிறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. […]
யூடியூப் நிறுவனம் தனக்கு மாதம் ரூ .4 லட்சம் தருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி டெல்லி-மும்பை புதிய விரைவு சாலையின் முன்னேற்றம் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டார். டெல்லி-மும்பை விரைவுச் சாலை, சுமார் ரூ.95,000 கோடி செலவில் கட்டப்பட்டு, மார்ச் 2023 க்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பெரும்பான்மையான பணிகள் ஏற்கனவே ஒப்பந்தக்காரர்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டன,இந்த நிலையில்தான், கட்கரி லோஹ்தகி கிராமத்தில் நடந்து வரும் திட்டப் […]
கூகுள் நிறுவனம் சில ஆண்ட்ராய்டு போன்களில் யூடியூப், ஜிமெயில், கூகுள் மேப்ஸ் போன்றவற்றை செப்டம்பர் 27 இல் இருந்து தடுக்க உள்ளது. பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் மூன்று அல்லது நான்கு வருட பயன்பாட்டிற்குப் பிறகு புதிய போன்களுக்கு மாறுகின்றனர். சிலர் பயன்படுத்தும் போன் வீணாகும் வரை பயன்படுத்த விரும்புகிறார்கள். நீங்கள் பழைய ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்களில் ஒருவராக இருந்தால் இது உங்களுக்கு முக்கியமான பதிவாக இருக்கும். ஆண்ட்ராய்டின் பழைய பதிப்பில் ஜிமெயில், யூடியூப், கூகுள் மேப்ஸ் […]
யூடியூப் சேனல்கள் செய்தி இணையத்தளங்களில் பொய்யான செய்திகள் வெளியிடுவது கவலை அளிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. நிஜாமுதீன் மார்காஸ் விவகாரம் மதவாதம் ஆக்கப்படுவதை தடுக்கக் கோரி, ஜமி அத்- உலேமா- ஏ- ஹிந்த் அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, யூடியூப் சேனல்கள் செய்தி இணையத்தளங்களில் பொய்யான செய்திகள் வெளியிடுவது கவலை அளிப்பதாக தெரிவித்தார். அதிகாரமிக்கவர்களின் கருத்துக்களை மட்டுமே அவை எதிரொலிப்பதாகவும், […]