கோகுலராஜ் கொலை வழக்கில் தண்டனை பெற்று கோவை சிறையில் உள்ள யுவராஜ், நீதிபதியை அவதூறாக பேசிய வழக்கில் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த 2015ஆம் ஆண்டு கோகுல்ராஜ் எனும் பொறியியல் பட்டதாரியை கொலை செய்த வழக்கில், யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு யுவராஜ் கோவை மத்திய சிறையில் தண்டனை பெற்று வருகிறார். இந்நிலையில், ஏற்கனவே நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது நீதிபதியை அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது. […]
கோகுல்ராஜ் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கார் ஓட்டுநர் ஆகியோருக்கு சாகும் வரை சிறை 3 ஆயுள் தண்டனையும், மற்ற 8 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மதுரை வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தண்டனையை ரத்து செய்ய வழக்கு: இதைத்தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் […]
கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கார் ஓட்டுநர் ஆகியோருக்கு சாகும் வரை சிறை 3 ஆயுள் தண்டனையும், மற்ற 8 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மதுரை வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் யுவராஜ் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முதல் குற்றவாளி யுவராஜ் கோவை சிறைக்கு மாற்றம் […]
தமிழ்நாட்டை உலுக்கிய பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என்று மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி நாமக்கல் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட நிலையில், மீட்கப்பட்டார். இந்த வழக்கில் யுவராஜ் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு, மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. கடந்த 2019 மே 5 முதல் […]