தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து, மேடையில் பேசிய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “2026 இல் நாம் பெறும் வெற்றி தமிழ்நாட்டுக்கான வெற்றி மட்டுமில்லை, இந்தியாவுக்கான வெற்றி. 200 இல்லை, 200க்கும் மேல் தொகுதிகளில் வெற்றி பெறுவோம்” என்றார். […]