உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியின் போது சூதாட்டத்தை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக யானைகள் பங்கேற்கும் கால்பந்தாட்டப் போட்டி தாய்லாந்தில் நடைபெற்றது. அந்நாட்டின் புராதான தலைநகரான ஆயுத்தாயா நகரில் இந்த விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. யானைகளுக்கேற்றாற் போன்று பெரிய வடிவில் தயாரிக்கப்பட்ட பந்துகள் பயன்படுத்தப்பட்டன. யானைகள் ஒரு அணியாகவும், வீரர்கள் ஒரு அணியாகவும் போட்டி நடைபெற்றது. வீரர்களை சாதாரணமாக பின்னுக்குத் தள்ளிய யானைகள் உற்சாகமாக பந்துகளை கடத்திச் சென்று கோலுக்குள் தள்ளின. உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் […]