மோடியின் ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்களில் விரைவான வளர்ச்சி : அமித்ஷா..!
நாட்டின் பொருளாதாரத்துக்குப் பங்களிக்கும் வகையில் வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியடைந்து வருவதாக பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அசாமின் கௌகாத்தியில் பேசிய அவர், நாடு விடுதலையடைந்த காலக்கட்டத்தில் வடகிழக்கு மாநிலங்கள் அதிக வளர்ச்சி விகிதம் கொண்டிருந்ததாகவும், அதன்பின் காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சி விகிதம் குறைந்துவிட்டதாகவும் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், வடகிழக்கு மாநிலங்களில் சாலை, ரயில்பாதை இணைப்பு, தகவல் தொழில்நுட்ப இணைப்பு, தொழில்வளர்ச்சி, கல்வி வசதிகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இதனால் நாட்டின் பொருளாதாரத்துக்குப் […]