பழனி முருகன் கோயிலில், ஊழியர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்காததால், 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கோரிக்கை பேட்ஜ் அணிந்து மொட்டை அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருக்கோயில்களில் மொட்டை போடும் தொழிலில் ஈடுபட்டு வந்த 1,749 தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அக்.5-ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்நிலையில், பழனி முருகன் கோயிலில், ஊழியர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை […]