சென்னை:அதிமுக உட்கட்சித் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை,சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கவுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தலுக்கு தடை விதிக்க கோரி அதிமுக உறுப்பினர் ஜெயச்சந்திரன் தரப்பில் நேற்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதில்,ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிட இரண்டு பேருக்கு மட்டுமே வேட்பு மனு வழங்கப்பட்டுள்ளதாகவும்,நாளை(அதாவது இன்று 7.12.21) தேர்தல் என அறிவித்துவிட்டு இன்று (6.12.21) மாலையே முடிவுகளை அறிவிக்க உள்ளதாகவும் உறுப்பினர் ஜெயச்சந்திரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால்,மனுவே […]
வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசால் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% உள் இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.100 பக்கங்களை கொண்ட அந்த மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: “அரசியலமைப்பு சட்டத்தின்படி உள்ஒதுக்கீடு […]
மருத்துவப் படிப்பில் பின் தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. எம்.பி.பி.எஸ், பல் மருத்துவம், மருத்துவ மேல்படிப்புகள் போன்றவற்றுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதலே இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என்று முன்னதாக மத்திய அரசு அறிவித்தது.அதன்படி, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதற்கிடையில்,மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69% […]