மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 22-வது வார்டில் எல்.எஸ்.புரம்., போரேகவுடர் வீதி ஆகிய பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் 2 மாதங்களாக 10-க்கும் மேற்பட்ட தெரு விளக்குகளில் மின் விளக்குகள் சரியாக எரியவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இரவு நேரத்தில் அந்த வழியே அச்சத்துடன் சென்றனர். இதுகுறித்து அப்பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக்கூறியும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நகராட்சி அதிகாரிகளின் இந்த மெத்தன போக்கைக் கண்டித்து இரவு அப்பகுதியை […]